மெரினாவில் தலைவர்களின் நினைவிடத்தை பார்வையிட தடை!

மெரினாவில் தலைவர்களின் நினைவிடத்தை பார்வையிட தடை!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் பார்வையாளர்களுக்கு நாளைவரை தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் பார்வையாளர்களுக்கு நாளைவரை தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா வழக்கமாக காந்தி சிலை அருகே கொண்டாடப்படும் நிலையில், அங்கு மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் இந்தாண்டு  காமராஜா் சாலையில் (கடற்கரைச் சாலை) உழைப்பாளா் சிலை கொண்டாடப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வரும் நிலையில், சென்னை காமராஜர் சாலை உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா நடைபெறும் காமராஜர் சாலை சுற்றியும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜிஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களை காண பார்வையாளர்களுக்கு நாளை நண்பகல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், நினைவிடங்களை பார்வையிட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com