
நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மூவர்ண பலூன்களையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பறக்கவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 112 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிக்க | ராணிப்பேட்டையில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!
பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாரட்டினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் பகலவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரைய்யா, வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.