
சென்னை அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்ததில் இளம்பெண் பலியான சம்பம் பெரும் பபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்ற நிலையில், அந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடைத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றுச்சுவரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், வங்கியில் பணிபுரியும் இளம்பெண் பிரியா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், 2 பெண்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டடம் இடிக்கும் பணிகளை மேற்கொண்டதே இந்த விபத்துக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.