இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனரா? 

DMK MP and former union minister TR Baalu courted controversy by saying he on many occasions compromised religious beliefs to complete development projects.
இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனரா? 

மதுரை:  வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற பல சமயங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்ததாகக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆா்.பாலு.

மதுரையில் சேதுசமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில், "எனது தொகுதியில் 100 ஆண்டுகள் பழமையான சரஸ்வதி கோவில், லட்சுமி கோவில், ஜிஎஸ்டி சாலையில் உள்ள பார்வதி கோவில் என மூன்று கோவில்களையும் இடித்தேன். எனக்கு வாக்கு கிடைக்காது என்று தெரியும். ஆனால். எப்படி வாக்குகளை பெறுவது என்பதும் எனக்கு தெரியும். கோவில்களை இடித்தால் எனக்கு வாக்குகள் கிடைக்காது என கட்டசி தோழர்கள் எச்சரித்தனர். ஆனால், வேறு வழியில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன்.

"கோயில் தேவை என்று கூறினேன். சிறந்த வசதிகளுடன் சிறந்த கோவில்களை கட்டினேன். இதுபோல் பல இடங்களில் மத நம்பிக்கைகளை சமரசம் செய்து திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்" என டி.ஆர் பாலு கூறினார்.

மேலும், தேசம் வளா்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு அரசியல் கட்சியினா் முன் மொழிந்ததன் பேரில் சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தும் மத்திய அரசின் முடிவு ரயிலை நடுவழியில் திடீரென நிறுத்துவது போன்றது என்றார்.

மத்திய அரசு அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையைப் பயன்படுத்தாமல், மத வழிகளைப் பின்பற்றாமல் ராமா் பாலம் சேதமடைந்து விடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறி சுமாா் 23.5 கி.மீ பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையில் திட்டத்தை நிறுத்துகிறது என்று பாலு குற்றம் சாட்டினார். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஆண்டுக்கு ரூ.750 கோடி லாபம் கிடைத்திருக்கும். தென் மாநிலங்கள் வளா்ச்சி பெறும். குறிப்பாக தமிழகம் வளா்ச்சி பெறும். மக்கள் அனைவரும் பகுத்தறிவுடன் உள்ளனா். அவா்களை மதத்தின் பெயரால் இனி ஏமாற்ற முடியாது என்று டி.ஆர். பாலு கூறினார்.

இந்நிலையில், டி.ஆர். பாலு பேசிய விடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், "100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடிப்பதில் திமுகவினர் பெருமை கொள்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையை கலைத்து, கோவிலை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இம்மாத தொடக்கத்தில், சேதுசமுத்திரத் திட்டத்தை மேலும் தாமதிக்காமல் மத்திய அரசை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், இத்திட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய நீர்வழித் திட்டம், சேதுசமுத்திரம் திட்டம் பால்க் ஜலசந்தியை மன்னார் வளைகுடாவுடன் இணைக்க முன்மொழிகிறது. இந்த திட்டம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பொருளாதார வளத்தை கொண்டுவருவதற்கான முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், இலங்கையை அடைய ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படும் 'ராம் சேது' பாலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும் என்பது போன்ற ஆன்மிக கருத்துக்களை கூறும் வலதுசாரிகளின் எதிர்ப்பால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

சேதுசமுத்திரம் திட்டத்தின் மூலம் கப்பலின் பயணத்தை கிட்டத்தட்ட 650 கி.மீ வரை குறையும்.

எவ்வித சான்றாவணமும் இல்லாமல், நாட்டின் தென்கோடி முனையான ராமேசுவரத்தில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com