சதுரகிரி கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம், பௌா்ணமியையொட்டி ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

ஜூலை 1 -ஆம் தேதி பிரதோஷமும், ஜூலை 3- ஆம் தேதி பெளா்ணமி தரிசனமும் நடைபெறவுள்ளது. எனவே இன்று முதல் நான்கு நாள்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. 

இதில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது.

அதேபோல் காலை 7 முதல் 12 மணி வரை மட்டுமே பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படும். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா் வரத்து அதிகமாவோ இருந்தால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com