சைலேந்திர பாபு  (கோப்புப் படம்)
சைலேந்திர பாபு (கோப்புப் படம்)

இனி மாணவர்களுடன் நமது பயணம்: சைலேந்திர பாபு

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு, இனி மாணவர்களுடன் நமது பயணம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு, இனி மாணவர்களுடன் நமது பயணம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையின தலைமை இயக்குநராக பணியாற்றி, நேற்று ஓய்வுபெற்ற சைலேந்திர பாபுவுக்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு புதிதாக பொறுப்பேற்ற தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தலைமை வகித்தாா்.

இந்த நிலையில், சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்தில், காவல் துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். இனி மாணவர்களுடன் நமது பயணம். நீங்கள் ஆக முடியாது என்பது எதுவுமில்லை; வாங்க முடியாது என்பது  ஏதுமில்லை ; செய்ய முடியாது என்பதும்  ஏதுமில்லை. Retired from police service. I will continue my journey with students. There is nothing you can’t be; nothing you can’t have and nothing you can’t do. என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு லட்சியக் கனவுகளின் விதைகளைத் தூவி வந்தவர், இனி விருட்சங்களை வளர்க்கும் பணியில் ஈடுபடுவார் என்றே கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com