கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்கள்: காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான ராணுவ வீரர் ஆரோன் இளையராஜா


தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத் தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா(38). இவர் 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி பட்டாலியன் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி  உள்ளார்.

இரண்டு நாள் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர், அண்ணன் மகன்கள் மற்றும் மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அண்ணன் மகன்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.  

இதனையடுத்து அவர்களை காப்பாற்ற ராணுவ வீரர் முயன்று உள்ளார். அப்போது அவரும் ஆழமான சேற்று பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் சிறுவர்களை  மீட்டு உள்ளனர். ஆனால் இராணுவ வீரர் ஆழமான பகுதியில் சென்றதால் நீரில் மூழ்கி மாயமானார். 

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் அவரை தேடும் பணியில் ஈடபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரை சடலமாக மீட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக  பூதலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாளை ராணுவ மரியாதை உடன் ஆரோன் இளையராஜா உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com