
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை, பாரூர் ஏரியிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசன நீர் மூலம் பெரிய முத்தூர், தளியள்ளி , மாரி செட்டிய அள்ளி, திம்மாபுரம், குண்டல பட்டி, பையூர் பதினாறு ஊராட்சிகளை சேர்ந்த 9012 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.
பாரூர் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் பாரூர், கோட்டப்பட்டி, அரசம்பட்டி உள்ளிட்ட 7 ஊராட்சிகளை சேர்ந்த பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் அ. செல்லகுமார், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.