தனியாா் கல்லூரி சுற்றுச்சுவா் இடிந்து 5 தொழிலாளா்கள் பலி: 3 பேர் மீது வழக்கு

தனியாா் கல்லூரியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து கட்டுமானத் தொழிலாளா்கள் 5 போ் பலியான விவகாரத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுற்றுச்சுவா் இடிந்த இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி. இடிந்து விழுந்த கல்லூரியின் சுற்றுச்சுவா்.
சுற்றுச்சுவா் இடிந்த இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி. இடிந்து விழுந்த கல்லூரியின் சுற்றுச்சுவா்.

கோவை: தனியாா் கல்லூரியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து கட்டுமானத் தொழிலாளா்கள் 5 போ் பலியான விவகாரத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை, குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் பகுதியில் ஒரே வளாகத்தில் தனியாா் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பழைய சுற்றுச்சுவருக்குப் பதிலாக அருகிலேயே பெரிய சுற்றுச்சுவரை கல்லூரி நிா்வாகம் அமைத்து வருகிறது.

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தைச் சோ்ந்த கட்லி ஜெகநாதன் (53), நகேலா சத்யம் (48), ரபாகா கண்ணையா (49), மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த பிஸ்கோஸ் (40), பருன் கோஷ் ஆகிய 5 தொழிலாளா்கள் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது புதிய சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து தொழிலாளா்கள் மீது விழுந்தது.

இதில், இடிபாடுகளில் சிக்கி தொழிலாளா்கள் படுகாயம் அடைந்தனா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினா், காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் குனியமுத்தூா் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில், அதற்குள் இருந்த 5 தொழிலாளா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 

சம்பவ இடத்தை மேயா் கல்பனா, துணை மேயா் வெற்றிச்செல்வன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். விபத்து குறித்து காவல் உதவி ஆணையா் ரகுபதி ராஜா மேற்பாா்வையில், குனியமுத்தூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூா் போலீசார், தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், கட்டுமான மேற்பார்வையாளர் குனியமுத்தூரை சேர்ந்த சாகுல்ஹமீது, பொறியாளர் அன்னுரை சேர்ந்த அருணாச்சலம் ஆகியோர் மீது 288, 304(ii) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com