அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் சாலை மறியல்

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் .
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் .


விராலிமலை: விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையால் பல்வேறு விபத்துகள் நேரிட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வந்த நிலையில், புதன்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து உடனடியாக மதுபான கடையை அகற்றக்கோரி விராலிமலை- புதுக்கோட்டை சாலை மலைக்குடிபட்டியில் சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மலைக்குடிபட்டியில் இருந்து தென்னலூர் செல்லும் சாலையோரம் அமைந்துள்ள இந்த மதுபான கடையில் பலரும் மதுபானம் அருந்திவிட்டு சாலையில் வேகமாக வருவதால் விபத்து அதிக அளவில் நேரிட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

புதன்கிழமை இரவு 11 வயது  விசாலினி என்ற மாணவி நடந்து சென்று கொண்டிருந்தபோது மது அருந்திவிட்டு அதி வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மாணவி மீது மோதியதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் இதில் ஆத்திரமடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு புதுக்கோட்டை- விராலிமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருவதால் கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிற்பதால் புதுக்கோட்டை விராலிமலை சாலையில் தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com