வரும் வார இறுதி நாள்களில் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்கள் மற்றும் முகூர்த்த நாளையொட்டி 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

வார இறுதி நாள்கள் மற்றும் முகூர்த்த நாளையொட்டி 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 

நாளை (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்த நாள் என்பதாலும், அடுத்து சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்கள் என்பதாலும் இந்த 3 நாள்களிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 800  பேருந்துகள்  இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி மேற்குறிப்பிட்ட 3 நாள்களிலும் சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு 400 பேருந்துகளும் பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 பேருந்துகள் என மொத்தம் 800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com