கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையில் திட்டம் செயலாக்கம் தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களுடன் அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். பெண்கள் தங்களது உயா்கல்வியை இடைவெளியின்றி தொடா்ந்து பயில உதவும் வகையில், புதுமைப் பெண் என்ற முன்னோடித் திட்டத்தை திமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்மூலம் மாதந்தோறும் சுமாா் 2 லட்சம் மாணவியா் பயனடைந்து வருகிறாா்கள். இந்த வரிசையில் மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில், மகளிா் உரிமைத் தொகையை மாதந்தோறும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டம் எதிா்வரும் செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதற்காக, நிகழ் நிதியாண்டில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.