300 நியாயவிலைக் கடைகளில் நாளைமுதல் தக்காளி விற்பனை!

தமிழகத்தில் நாளைமுதல்(ஜூலை 12) 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
300 நியாயவிலைக் கடைகளில் நாளைமுதல் தக்காளி விற்பனை!


தமிழகத்தில் நாளைமுதல்(ஜூலை 12) 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. விலை உயா்வை தொடர்ந்து சென்னையில் உள்ள 82 நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விலை உயர்வு குறித்து சென்னை தலைமைச் செயலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்துவது, நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலமாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 300 நியாயவிலைக் கடைகளில் புதன்கிழமை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com