தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு கூட்டுறவு வங்கியின் 4 கிளைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் நான்கு புதிய கிளைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு கூட்டுறவு வங்கியின் 4 கிளைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் நான்கு புதிய கிளைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக வங்கிக் கிளைகளை அவா் திறந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:- தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி சாா்பில் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூா், அம்பத்தூா் ஆகிய இடங்களில் புதிய கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிளைகளை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியானது, சென்னையில் சுமாா் 5 லட்சம் வாடிக்கையாளா்களுக்கு சேவைகளை அளித்து வருகிறது. வணிக வங்கிகளுக்கு நிகராக கூட்டுறவு வங்கியின் அனைத்துச் சேவைகளும் கணினி வழியில் நடைபெறுகிறது. இணையவழி, கைப்பேசி வழி வங்கிச் சேவைகள், தானியங்கி பணப்பட்டுவாடா வசதி போன்றவை

வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவடைந்த நிலையில், வங்கிக் கிளைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், நிகழாண்டில் நான்கு இடங்களில் புதிதாக வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கிளைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் டி.ஜகந்நாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன் உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com