புது தில்லியில் புதன்கிழமை நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டத்தில் தியேட்டரில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி என விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன.
என்னங்க.. பாப்கார்ன் வாங்க ஒரு வழிமுறையா என்று யோசிக்கிறீர்களா.. இருக்கிறதே.
இதையும் படிக்க.. காகித பொம்மைகளை கடல்கடந்து ஏற்றுமதி செய்யும் கோவை பெண்
அடுத்தமுறை, தியேட்டருக்குச் சென்றால், டிக்கெட்டுடன் காம்போ ஆஃபர்கள் என்று சொன்னால் அதனை வாங்காதீர்கள். ஏனென்றால், தியேட்டரில் விற்கப்படும் உணவுப் பொருள்கள், குளிர்பானம் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விலைக் குறைப்பு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் டிக்கெட் மற்றும் உணவுப்பொருள்களை தனித்தனியாக வாங்க வேண்டும்.
திரையரங்கு டிக்கெட்டுடன் உணவுப் பொருள்களை ஒன்றாக வாங்கும்போது, அதற்கு 18 சதவிகிதம்தான் ஜிஎஸ்டி விதிக்கப்படும். எனவே, டிக்கெட் எடுத்த பிறகு, தனியாக உணவுப் பொருள்களை வாங்கினால் அதற்கு 5 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலைதான் ஆன்லைனில் வாங்கும்போதும் நேரிடும் என்கிறார்கள் அதிகாரிகள். ஆன்லைனிலும் தனித்தனியாக வாங்கினால்தான் வரி விகிதம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.