பிரான்ஸில் பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன்: வைரலாகும் புகைப்படங்கள்!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை பாரீஸில் லூவ்ரே அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த பாஸ்டில் டே விருந்து அளித்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் நடிகர் மாதவனும் ஒருவர்.
கடந்த சனிக்கிழமை பாரீஸில் லூவ்ரே அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த பாஸ்டில் டே விருந்து அளித்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் நடிகர் மாதவனும் ஒருவர்.
Published on
Updated on
2 min read

பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ஆம் தேதி தேசிய தினம் பாஸ்டில் டே கொண்டாடப்பட்டு வருகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மக்ரோனுடன் நடிகர் மாதவன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரான் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்கு சென்றிருந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வறவேற்றார். தொடர்ந்து மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பாஸ்டில் தின அணி வகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கினார். மேலும், பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இரவு விருந்து வழங்கினார்.

இந்தநிலையில் இந்த இரவு விருந்தில் நடிகர் மாதவன் கலந்து கொண்டுள்ளார். இதனை தனது சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ள அவர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இவை தற்போது வைரலாகி வருகிறது.

என் வாழ்க்கையில் எப்போதும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீ  என்று மாதவன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com