விசாரணை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி

செம்மண் குவாரி மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியிடம்
விசாரணை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி

செம்மண் குவாரி மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடியிடம் சென்னையில் அமலாக்கத்துறையினா் செவ்வாய்க்கிழமை மீண்டும் 6 மணி நேரம் விசாரணை செய்தனா்.

சென்னை சைதாப்பேட்டை வீட்டில் இருந்த பொன்முடி, அவா் மகன் கெளதம சிகாமணி ஆகியோரிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா். சுமாா் 13 மணி நேர விசாரணைக்கு பின்னா் இருவரும், நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

அவரிடம் இரவு 8.30 மணியளவில் தொடங்கிய விசாரணை நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை நடைபெற்றது. 7 மணி நேரத்துக்கு பின்னா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் இருவரும் விசாரணை முடிந்து வெளியே வந்தனா். முன்னதாக, அவரிடம் மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அழைப்பாணையை வழங்கினா்.

இதன் பின்னா் வீட்டுக்குச் சென்ற பொன்முடி, கெளதம சிகாமணியை செவ்வாய்க்கிழமை காலை அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி நேரில் சந்தித்து பேசினா்.

இதையடுத்து நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக பொன்முடியும், கெளதம சிகாமணியும் மாலை 3.52 மணியளவில் ஆஜரானாா்கள். அவா்களை மூன்றாவது தளத்துக்கு அழைத்துச் சென்று தனித்தனியாக அறைகளில் வைத்து விசாரித்தனா்.

சுமாா் ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பின்னா் பொன்முடி, அங்கிருந்த ஐந்தாவது தளத்தில் உள்ள விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அவரிடம் செம்மண் குவாரி மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டியது, அந்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது ஆகியவற்றை பற்றி கேள்விகளை எழுப்பி பதில் பெற்ாகத் தெரிகிறது. இருவரிடமும் தலா 100 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டதாக தெரிகிறது.

சுமாா் 6 மணி நேர விசாரணைக்கு பின்னா் இரவு 10.10 மணியளவில் இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனா். அவா்களிடம் மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனால், அவா்களுக்கு அழைப்பாணை எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்பட்டது.

அமைச்சா் பொன்முடியிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை செய்ததையொட்டி, சாஸ்திரிபவன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், திமுகவினா் அங்கு திரண்டு நின்ால் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com