கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சமீபத்தில், மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் விடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
கனல் கண்ணன்  (கோப்புப் படம்)
கனல் கண்ணன் (கோப்புப் படம்)


சமூக வலைதளத்தில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சா்ச்சைக்குரிய விடியோவை வெளியிட்ட விவகாரத்தில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

திரைப்பட சண்டை பயிற்சியாளரான கனல் கண்ணன், இந்து முன்னணி நிர்வாகியாகவும், பாஜக ஆதரவாளராகவும் செயல்பட்டு வருபவர்.

இவர் சமீபத்தில், மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் விடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விடியோ தமிழ் பாடலுடன் எடிட் செய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்? மதம் மாறிய ஹிந்து மக்களே சிந்தியுங்கள்! என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இந்தப் பதிவு கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்ட பிறகு கடந்த 10ஆம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com