சிதம்பரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல்
சிதம்பரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல்

சிதம்பரத்தில் 14 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல்!

சிதம்பரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வீடுகளை பூட்டி இந்து அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர்.

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வீடுகளை பூட்டி இந்து அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர்.

சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள குரு நமச்சிவாயர் மடத்தில் உள்ள யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் மற்றும் மாணிக்கவாசகர் ஆலய வளாகத்தில் 22-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு உள்ளது.

இது வழிபாட்டுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14 வீடுகளை பூட்டி சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே உத்தரவு வெளியான நிலையில் பல மாதங்களுக்கு பிறகு புதன்கிழமை சீல் வைக்கும் பணி தொடங்கியது.

இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் 4 செயல் அலுவலர்கள் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் 14 வீடுகளை பூட்டி சீல் வைக்கும் பணி தொடங்கி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com