இஸ்லாமியர்கள் மீதான என்ஐஏ சோதனை பாஜக அரசின் வன்மத்தின் வெளிப்பாடு: கருணாஸ் கண்டனம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மீதான என்ஐஏ சோதனை இஸ்லாமியர்கள் மீதான பாஜக அரசின் வன்மத்தின் வெளிப்பாடு தான் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது. கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், 
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மீதான என்ஐஏ சோதனை இஸ்லாமியர்கள் மீதான பாஜக அரசின் வன்மத்தின் வெளிப்பாடு தான் என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது. கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற சோதனைகளை செய்து தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் ஓர் பதற்றத்தை ஏற்படுத்துகிறது மத்திய பாஜக அரசு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், நெல்லை உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சியினர் வீடுகளில்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியை  தேசவிரோத கட்சிபோல் சித்தரிக்கிறது பாஜக. இது இஸ்லாமியர் மீதான பாஜகவின் மதவெறியாட்டமே.

எஸ்டிபிஐ கட்சி மக்கள் நலன், சமூக நலன் என பல்வேறு மனிதநேய சேவைகளை செய்து வரும் மக்கள் அமைப்பு. ஆனால் பாஜக ஆர்.எஸ்.எஸ் சங்கி பரவாரிங்கள் எஸ்டிபி ஐ மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பி இது போன்ற சோதனைகள் மூலம் அடக்க நினைப்பது கண்டனத்திற்குரியது.

கும்பகோணம்  திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பான சோதனை என்றாலும்,  இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
2019 ஆம் ஆண்டிலிருந்து  இந்த வழக்கில் முதலில் முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, அசாருதீன், ரிஸ்வான், சர்புதீன் உள்ளிட்ட மொத்தம் 13  பேரைக் கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

முறையாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அதிரடியாக மீண்டும் விசாரணை சோதனை என்ற பெயரில் ஓர் பதற்றத்தை பற்றவைக்கிறது என்ஐஎ. இது இஸ்லாமியர்கள் மீதான வன்மம், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தேவையற்ற என்ஐஏ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். தமிழக அரசு சிறுபான்மையினருக்கான அரசு என்பதை இவர்கள் மீதான நடிவடிக்கையின் வெளிப்பாட்டில் உணர்த்த வேண்டும் என கருணாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com