தாமிரவருணியில் மூழ்கி மாஞ்சோலை தொழிலாளர்கள் உயிரிழந்த தினம்: கட்சியினர் மலரஞ்சலி

திருநெல்வேலியில் தாமிவருணி ஆற்றில் மூழ்கி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Published on
Updated on
1 min read

திருநெல்வேலியில் தாமிவருணி ஆற்றில் மூழ்கி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மாஞ்சோலையில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கடந்த 1999ஆம் ஆண்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஜூலை 23ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். சுமார் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியின்போது போலீஸாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது தாமிரவருணியில் மூழ்கியும், பலத்த காயமடைந்தும் 17 பேர் உயிரிழந்தனர். இந்தத் தொழிலாளர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தாமிரவருணி நதியில் பல்வேறு கட்சியினரும் மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பாஜக சார்பில் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் அக் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பிலும் தாமிரவருணியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி மாநகரில் வழக்கத்தைவிட கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com