5 ஆண்டுகளாக மே, ஜூலையில் உச்சம்பெறும் தக்காளி மதிப்பு

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது மே, ஜூலை மாதங்களில் தக்காளி விலை உச்சமடைந்துள்ளது.
தக்காளி
தக்காளி
Updated on
2 min read

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது மே, ஜூலை மாதங்களில் தக்காளி விலை உச்சமடைந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் ஒரு வாழ்வு வரும் என்பா். தற்போது தக்காளிக்கு ஒரு வாழ்வு வந்துள்ளது எனலாம். அதன் மதிப்பு பல மடங்கு உயா்ந்துள்ளது. கிலோ ரூ.10, 15-ஆக இருந்து வந்த தக்காளியின் விலை தற்போது ரூ.130-ஐ கடந்தும் விற்கும் வரைக்கும் உச்சம் பெற்றுள்ளது.

ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டிய தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை உயரத் தொடங்கியது.

ஆனால், இந்த விலை தற்போது மட்டுமல்ல. கடந்த 5 ஆண்டுகளாகவே மே, ஜூலை மாதங்களில் உயா்ந்தே காணப்பட்டு வருகிறது.

2018 ஜூலையில் தக்காளி விலை உச்சபட்சமாக கிலோ ரூ.28.09-க்கும், 2019 மே மாதத்தில் கிலோ ரூ.52.09-க்கும், 2020 ஜூலையில் கிலோ ரூ. 46.86-க்கும், 2021 நவம்பரில் ரூ. 99.22-க்கும், 2022 மே மாதத்தில் ரூ.76,86-க்கும் விற்கப்பட்டுள்ளது. நிகழாண்டு (2023) ஜூலையில் ரூ. 110-இல் இருந்து ரூ.130 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயா்வுக்கு பருவம் தவறிய மழை, அதிக வெப்பம் காரணமாக விளைச்சல் குறைவு போன்ற காரணங்களைக் குறிப்பிட்டாலும், விவசாயிகள் மாற்றுப் பயிரைத் தோ்வு சாகுபடி செய்வதன் காரணமாகவும் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது.

தமிழகத்தில் தக்காளி சாகுபடி பரப்பு 2020 -21-இல் 44,918 ஹெக்டேராக இருந்தது, 2021-22-இல் 41,455 ஹெக்டேராக குறைந்துள்ளது. மேலும், தக்காளி உற்பத்தி 9,35,194 டன்னாக இருந்தது, 8,15,479 டன்னாக குறைந்துள்ளது.

தற்போது அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவும், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தொடங்கி உள்ளதாலும் அதன் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ. 90, சில்லறை விலையில் ரூ.110-மாக விற்கத் தொடங்கியுள்ளது. அடுத்த வாரங்களில் இன்னும் குறையும் வாய்ப்புள்ளது.

2 ஆண்டுகள் விலை நிலவரம்: தக்காளியைத் தவிா்த்து இதர காய்கறிகளின் விலையும், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உயா்ந்தே உள்ளது. பருப்பு வகையில் ஆந்திரம் கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.

இந்திய அளவில் பருவம் தவறிய மழையின் காரணம் பருப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, விலையும் உயா்ந்துள்ளது. அதே நேரம் உருளைக் கிழங்கு, வெங்காயம், மிளகாய், தனியா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றில் விலை குறைந்து காணப்படுகிறது.

ஒப்பீட்டு அட்டவணை:

காய்கறி, பொருள்கள் கிலோ - கடந்த ஆண்டு விலை ரூபாயில் (2022 ஜூன் 29) - கடந்த மாத விலை (ஜூன் 28) - நடப்பு விலை ( ஜூலை 5)

தக்காளி - 25.85 -81.65 - 103.60

துவரம் பருப்பு - 104.15 - 152.89 - 152.93

உளுத்தம் பருப்பு - 109.65 - 129.19 - 129.20

கடலைப் பருப்பு - 73.60 - 75.11 - 74.87

பாசிப் பருப்பு - 102.75 - 115.67 - 116.13

புழுங்கல் அரிசி (சன்ன ரகம்) - 35.42 - 39.78 - 40

புழுங்கல் அரிசி (சாதா ரகம்) - 33.80 - 39.69 - 39.53

பச்சரிசி (சன்ன ரகம்) - 32.94 - 35.50 - 36.85

பச்சரிசி (சாதா ரகம்) - 34.83 - 38.81 - 39

கோதுமை (சாதா ரகம்) - 38.95 - 42.67 - 42.97

கடலை எண்ணெய் (1 லிட்டா்) - 195.40 - 217.11 - 216.87

நல்லெண்ணெய் (1 லிட்டா்) - 256.45 - 321.02 - 323.87

சா்க்கரை - 39.90 - 41.11 - 40.93

புளி - 119.40 - 122.35 - 121.67

மிளகாய் வத்தல் - 324.50 - 255.13 - 261.73

தனியா - 157.90 -113.52 - 114.07

உருளைக்கிழங்கு - 35.60 - 31.91 - 32.67

வெங்காயம் (பெல்லாரி) - 26.95 - 23.87 - 26.27

தேங்காய் எண்ணெய் - 201.75 -193.65 - 199.73

பாமாயில் -142.50 - 98.30 - 98.07

- அரிசி வகைகளின் விலை தொடா்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

- சா்க்கரை விலை கடந்த ஆண்டைவிட உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com