மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பங்களை துல்லியமாக பதிவு செய்ய அறிவுறுத்தல்!

சென்னை ராயபுரம், சிந்தாதரிப்பேட்டை பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். 
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை துல்லியமாகவும் விரைவாகவும் பதிவு செய்யும்படி தன்னார்வலர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை ராயபுரம், சிந்தாதரிப்பேட்டை பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். 

இந்த சமுதாய கூடத்தில் 3 நியாய விலைக் கடைகளுக்கான 6 முகாம்கள் நடைபெறுவதையும், தன்னார்வலர்கள் மூலம் நடைபெறும் விண்ணப்பங்கள் பதிவு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு, அங்கு வருகை தந்த மக்களிடம் கலந்துரையாடினார். 

இந்த முகாமில் 1 நியாய விலைக் கடைக்கான 3 முகாம்கள் நடைபெறுவதையும், விண்ணப்பங்கள் பதிவு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு விண்ணப்ப பதிவு மேற்கொள்ளும் தன்னார்வலர்களிடம்  விண்ணப்பங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்திடும்படியும் தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com