வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வுப்பகுதி!

ஆந்திரப் பிரதேசம் அருகே, மத்திய மேற்கு அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் உருவான காற்றுழுத்த தாழ்வுப்பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆந்திரப் பிரதேசம் அருகே, மத்திய மேற்கு அதனையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் உருவான காற்றுழுத்த தாழ்வுப்பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இதனால் காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இரு நாள்கள் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரப் பிரதேசம்-தெற்கு ஒடிஸா கடற்கரைப் பகுதியை நோக்கி மெதுவாக நகா்கிறது. இது புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 26, 27) தேதிகளில் வடக்கு ஆந்திரப் பிரதேசம்-தெற்கு ஒடிஸா பகுதியில் கரையைக் கடக்கும் . 

இதனால் ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வடமாவட்டங்களில் இருநாள்கள் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

மேலும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com