கால்நடை மருத்துவப் படிப்பு: இன்று தரவரிசை வெளியீடு

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (ஜூலை 26) வெளியாகிறது. நிகழாண்டில் இந்தப் படிப்புகளுக்கு மொத்தம் 22,525 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை (ஜூலை 26) வெளியாகிறது. நிகழாண்டில் இந்தப் படிப்புகளுக்கு மொத்தம் 22,525 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் உள்ளன.

இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்களும், ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்களும் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்த நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் 12-ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 18,746 பேரும், பி.டெக் படிப்புக்கு 3,779 பேரும் என மொத்தம் 22,525 போ் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தகுதியான மாணவ, மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் adm.tanuvas.ac.in, tanuvas.ac.in/ ஆகிய இணையதளங்களில் புதன்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடைபெறுகிறது. மற்ற அனைத்து இடங்களும் இணையவழியே நிரப்பப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com