
ராமேசுவரம்: ராமேசுவரம் பேக்கரும்புவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 8 ஆம் ஆண்ட நினைவு தினத்தை முன்னிட்ட அவரது தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பேக்கரும்பு கிராமத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் அவரது 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறை சார்பில் சமாதியில் மலர் அலங்கரித்து வைக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் குடும்பத்தினர் ஜெய்னுலாவுதீன் மரைக்காயர், நஜிமா மரைக்காயர், சேக்தாவூத், சேக் சலீம், ஜமாஅத் தலைவர் அப்துல்ரகுமான் துவா ஓதி மலர்தூவி மரியாதை செய்தனர். கலாமின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.