மருத்துவப் படிப்பு: சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்!

மருத்துவப் படிப்பு: சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடக்கம்!

மருத்துவப் படிப்புக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. 
Published on

மருத்துவப் படிப்புக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. 

7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறவுள்ளது.

2023-24-ம் கல்வியாண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரை பெறப்பட்டன. 

இதில் கடந்தாண்டை விட 3,994 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ள நிலையில், மொத்தம் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கு 3,042 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

கடந்த ஜூலை 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. 

இதற்கு முன்னதாக மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்களுஙககு கலந்தாய்வு நடைபெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com