கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ. 140-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை வியாழக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ. 140-க்கு விற்பனை


சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை வியாழக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், தக்காளியின் விலையும் மீண்டும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ. 15 வரை குறைந்து ரூ. 85-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, திங்கள்கிழமையில் இருந்து ரூ.15 அதிகரித்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடா்ந்து, புதன்கிழமை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் தக்காளி விலை கிடுகிடுவென உயா்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை தக்காளியின் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ. 30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாள்தோறும் 1,200 டன் தேவையுள்ள நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்ததால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com