

நெய்வேலி கலவரத்தில் காயமடைந்த காவலர்களை நேரில் சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார்.
என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலர்களை சந்தித்த அவர் காவலர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டதையடுத்து பாமகவினர் போலீசார் மீதும் போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் நெய்வேலி காவல்துறை ஆய்வாளர் உள்பட இரு தரப்பிலும் பலர் படுகாயமடைந்தனர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டனர்.
பதற்றம் காரணமாக நெய்வேலியில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.