அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்குகிறார் பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கிக் கொண்டிருக்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். 
அப்துல் கலாமின் கனவுகளை நனவாக்குகிறார் பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு

ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கிக் கொண்டிருக்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். 
 
ராமேசுவரத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற அப்துல் கலாமின் 'நினைவுகள் மரணிப்பதில்லை' என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தக வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்தாலும், திறமையிருந்தால் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியையும் ஒருவர் அடைய முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். 

இந்தியா ஒரே தேசம் என்பதை உணர்ந்து மொத்த திறனையும் முன்னிலைப்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி வேண்டும். தொழில் வளர்ச்சியுடன் விவசாயத்தையும் ஊக்குவித்து கிராம, நகர வளர்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அப்துல் கலாம். அதை தற்போது நடைமுறைப்படுத்தி அவரது கனவை நனவாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

உயர் பதவியில் இருந்தாலும் எளிமையாக ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்று   வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம் என்றார் அமித் ஷா.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன்,  மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை உறுப்பினர் கீதா பாரதி ஜெயின், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இணைவேந்தர் ரவி பச்சமுத்து, 'அப்துல் கலாமின் நினைவுகள் மரணிப்பதில்லை' ஆசிரியர்களில் ஒருவரும் அப்துல் கலாமின் சகோதரர் மகளுமான நசீமா, அவரது உறவினர்கள் ஷேக் தாவுது ஷேக் சலீம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து,  அமித் ஷா, அப்துல் கலாமின் இல்லத்துக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

பின்னர், குந்துக்கால் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்றார். சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலத்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு சில நிமிடங்கள் அவர் தியானம் மேற்கொண்டார். அங்கு, மதிய உணவை நிறைவு செய்து கொண்ட அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com