துறையூரில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

துறையூரில் நீதிமன்றம் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள்.

திருச்சி மாவட்டம், துறையூரில் நீதிமன்றம் திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு துறையூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எஸ். சுரேஷ் குமார் தலைமை வகித்தார். செயலர் பி கோகிலா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

உண்ணாவிரத்தில் சசிகுமார், செந்தில்குமார், முத்துக்குமார், சிவகுமார், பாஸ்கரன், செல்வராசு ராஜு, அறிவழகன் அருண்குமார், ராஜேந்திரன், குலாம் முஹம்மது உள்ளிட்ட வழக்குரைஞர்கள் பலரும் மற்றும் பாதிப்புக்குள்ளான கிராமத்திலிருந்து சிலர் திரளாக பங்கேற்றனர்.

முசிறி குற்றவியல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட ஜம்புநாதபுரம் காவல் நிலைய வழக்குகளை மீண்டும் துறையூர் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்திரவிடக் கோரி உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

குறிப்பாக துறையூர் வட்டத்தைச் சேர்ந்த ஜம்புநாதபுரம் காவல் நிலைய ஆளுகைக்குட்பட்ட கண்ணனூர் கண்ணனூர்பாளையம், வீரமச்சான்பட்டி, ஆதனூர், பொன்னுசங்கம்பட்டி, சேனப்பநல்லூர், சொக்கநாதபுரம் உள்ளிட்ட 7 ஊராட்சிகளின் பொதுமக்கள் நலன் கருதி அந்தக் கிராமங்கள் தொடர்பான குற்ற வழக்குகளை துறையூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று போராட்டத்தில் பேசிய வழக்குரைஞர்கள் வலியுறுத்தினர். 

கடந்த வாரம் முழுதும் நீதிமன்ற பணியிலிருந்து வழக்குரைஞர்கள் விலகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com