2023 இறுதிக்குள் சேத்துப்பட்டு ஏரிக்குக் கீழே மெட்ரோ சுரங்கப் பணி

சேத்துப்பட்டு ஏரிக்குக் கீழே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 இறுதிக்குள் சேத்துப்பட்டு ஏரிக்குக் கீழே மெட்ரோ சுரங்கப் பணி
Updated on
1 min read


சேத்துப்பட்டு ஏரிக்குக் கீழே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் 6 மாதங்களுக்குள் சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையத்துக்கான கட்டமைப்புகள் நிறுவும் பணி தொடங்கிவிடும், பிறகு, சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கொண்டு சேத்துப்பட்டு ஏரிக்குக் கீழே சுரங்கம் தோண்டப்படும். சென்னையில் அமையவிருக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் வழித்தடமான மாதவரம் - சிறுசேரி இடையே சேத்துப்பட்டு ரயில்நிலையம் அமையவிருக்கிறது.

சேத்துப்பட்டு ஏரிக்குக் கீழே சுரங்கம் அமைக்கும் பணியானது நிறைவடைய ஆறு மாதங்கள் வரை ஆகலாம். அதன்பிறகு, சுரங்கத்துக்குள் கட்டுமானத்தை நிறுவ மேலும் 1 மாதம் ஆகலாம். இந்தப் பணிகளை 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மாதவரம் பால் பண்ணை -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூா் ஆகிய தடங்களில் 118 கி.மீட்டா் தொலைவுக்கு இந்த பணிகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து மெட்ரோ ரயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.

மாதவரம் மற்றும் பசுமை வழித்தடத்தில் சுரங்கப் பணிகள் ஜூலையில் தொடங்கவிருக்கிறது. ஸ்டொ்லிங் சாலை சந்திப்பின் கீழ் 850 மீ நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமையவுள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதி ஆகும்.

இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஜூலை முதல் சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை பணி துளையிடும் இயந்திரம் மூலம் 22 மீ ஆழத்தில் தொடங்கப்படும். இது ஸ்டொ்லிங் சாலை சந்திப்பை நோக்கிச் செல்லும் போது ஆழம் 15 மீட்டராக குறையும். ஏற்கனவே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com