இன்றைய நாள் எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அதிர்ச்சித் தகவல்
இன்றைய நாள் எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அதிர்ச்சித் தகவல்

இன்றைய நாள் எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அதிர்ச்சித் தகவல்

இனி வரும் நாள்களில் வெயில் குறையும் என்று எதிர்பார்த்திருந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


இதுவரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வந்தது. அது நிறைவு பெற்றதால் இனி வரும் நாள்களில் வெயில் குறையும் என்று எதிர்பார்த்திருந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அக்னி நட்சத்திரம் நிறைவடைந்தாலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் துயரம் விடைபெறவில்லை.

நேற்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெப்பம் வாட்டிவதைத்த நிலையில், வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும், நுங்கம்பாக்கமே இப்படியென்றால் மீனம்பாக்கம் எப்படி என்று பாருங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

வானிலை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுவரும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது. அப்படியென்றால் இன்று மீனம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்னவென்று நீங்களே கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 

அது மட்டுமல்ல, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இன்று 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது. 

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாளாகக் கூட இன்றைய நாள் இருக்கலாம். கடந்த மே 23ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரியை தொட்டது நினைவிருக்கலாம் என்று பதிவிட்டு, வடிவேலுவின் காமெடி புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

இதற்கிடையே சென்னையில் ஜூன் 4ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், வரும் நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு அளவை விட 2 டிகிரிஅதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுவாக அதிகபட்ச வெப்பநிலைடி 39 - 41 டிகிரி செல்சியஸ் என இருக்கும் என்றும், சென்னையில் அடுத்த இரு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 - 41 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், உண்மையில் கத்திரி இனிதான் ஆரம்பம் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நாள்களில் அதிகபட்ச வெப்பம் அதிகரிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேனின் பதிவுக்கு, இதுக்கு இல்லையா ஒரு எண்டு, வெப்பத்தைத் தாங்க முடியவில்லை என்றும், தங்கள் பகுதியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று பலரும் பல தரப்பிலிருந்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com