பள்ளிகள் திறப்பு: 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், பள்ளிகள் திறப்பை ஜூன் 7ஆம் தேதிக்கு தமிழக அரசு ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக 2,200 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு நகரங்களிலிருந்து சென்னைக்கு மட்டும் 900 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.