சிதம்பரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா: துப்புரவுத் தொழிலாளர்களுக்கு புத்தாடை

சிதம்பரத்தில்  நகர திமுக மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கிய நகரச் செயலாளரும், நகரமன்ற தலைவருமான கே.ஆர்.செந்தில்குமார்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கிய நகரச் செயலாளரும், நகரமன்ற தலைவருமான கே.ஆர்.செந்தில்குமார்
Updated on
1 min read

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில்  நகர திமுக மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நடைபெற்ற மாவட்ட பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர திமுக செயலாளரும், நகரமன்ற தலைவருமான கே.ஆர்.செந்தில்குமார் பங்கேற்று கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பின்னர் நகராட்சி துப்புரவு பணியளர்கள் 30 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார். பின்னர் சின்ன செட்டித்தெருவில் த.ஜேம்ஸ்விஜயராகவன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் கட்சி கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளில் மாநில பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ப.அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி , மக்கள்.க.உத்திராபதி, நகர அவைத்தலைவர் பி.எஸ்.ராஜராஜன், நகர பொருளாளர் மா.கிருபாகரன், நகரமன்ற உறுப்பினர்கள்  ஏ.ஆர்.சி.பி மணிகண்டன், கு.சுதா குமார், ஜெ.அறிவழகன் , நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க.அருள், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com