
பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோருக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் நாளை வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆா்க்., பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 5-ம் தேதி முதல் தொடங்கியது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 4-ம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் இதுவரை 1,87,693 பேர் இந்தாண்டு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான தரவரிசையை முடிவு செய்வதற்கான ரேண்டம் எண் நாளை வெளியாகிறது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரேண்டம் எண் உருவாக்கப்படும் அதை இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம்.
ஒரே மாதியாக கட்ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கு கடந்தாண்டை விட 16,810 பேர் இந்தாண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
விளையாட்டு பிரிவை தவிரப் பிற பிரிவு மாணவர்களுக்கு இணைய வழியாக சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.