ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீது வழக்குப் பதிவு: தொடர்புடைய இடங்களில் சோதனை!

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீது வழக்குப் பதிவு: தொடர்புடைய இடங்களில் சோதனை!

வருமான வரி சோதனையைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

வருமான வரி சோதனையைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் தருமபுரி மாவட்ட ஆட்சியருடைய விருகம்பாக்கம் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய தனியார் நிறுவனங்களிலும் சுமார் 10 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் முறைகேடாக 1,31,77,500 ரூபாய் கையாடல் சொத்துக் குவிப்பு தொடர்பாக நேற்று முதல் சோதனை நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய சென்னை அறிவியல் நகரின் துணைத் தலைவராக பணிபுரிந்து வரும் மலர்விழி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக 28.02.2018 முதல் 29.10.2020 தேதி வரை பணிபுரிந்தார்.

அப்போது, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு தமிழக அரசின் ஐந்தாவது மாநில நிதி குழு மானிய நிதியிலிருந்து சொத்துவரி வசூல் ரசீது புத்தங்கள், குடிநீர் கட்டணம் வசூல் ரசீது புத்தங்கள், தொழில்வரி வசூல் ரசீது புத்தங்கள் மற்றும் இதர கட்டண புத்தங்கள் மொத்தம் 1,25,500 எண்ணிக்கையில் 2 தனியார் நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்து கிராம ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.

இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படாமல் நேரடியாக 2 தனியார் நிறுவனங்களிலிருந்து மேற்படி வரிவசூல் புத்தங்களை அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ததில் முறைகேடு தொடர்பாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் மலர்விழி, தாகீர்உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோர்கள் மீது வழக்குப்  பதிவு தற்போது செய்யப்பட்டது.

இது தொடர்பாக, சென்னையில்  விருகம்பாக்கம் சாலையில் உள்ள மலர்விழி வீடுகள் மற்றும்  அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அதில் சென்னையில் ஐந்து இடங்களிலும், விழுப்புரம் மற்றும் தருமபுரியில் தலா ஒரு இடங்களிலும் மற்றும் புதுக்கோட்டையில் மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com