
தாம்பரம்: தாம்பரம் அடுத்த படப்பை அருகே இரவு ரோந்து பணியின்போது கடையில் ஓசியில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரவு ரோந்து பணியின்போது கடையில் ஓசியில் டீ, ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லெட், குடிநீர் கேன் வாங்கிக் கொண்டு, அதற்கான பணம் தர மறுத்து தகராறு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.