அரசு ஐ.டி.ஐ.யில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு அரசு  தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.)பல்வேறு தொழில் பிரிவுகளுக்கான சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு அரசு  தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.)பல்வேறு தொழில் பிரிவுகளுக்கான சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். 

தமிழ்நாடு அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ) நிகழாண்டுக்கான பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான சோ்க்கை இணையதளம் மூலம் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

பயிற்சியில் சேர விருப்பம் உள்ள 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். 

பயிற்சியில் சேரும் பயிற்சியாளா்களுக்கு அரசால் விலையில்லா மடிக்கணினி, பாடப் புத்தகம், மிதிவண்டி, சீருடை மற்றும் காலணியுடன் சோ்த்து மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 750 வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, அரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா், முதல்வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளாா்.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.skilltraning.tn.gov.in என்ற இணையதளத்தில் விரைந்து விண்ணப்பிக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com