தேனிலவுக்கு சென்ற புதுமணத் தம்பதி இந்தோனேசியாவில் நீரில் மூழ்கி பலி!

இந்தோனேசியாவிற்கு தேனிலவு கொண்டாட சென்ற பூந்தமல்லியைச் சோ்ந்த புதுமண மருத்துவ தம்பதி நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
தேனிலவுக்கு சென்ற புதுமணத் தம்பதி இந்தோனேசியாவில் நீரில் மூழ்கி பலி!

இந்தோனேசியாவிற்கு தேனிலவு கொண்டாட சென்ற பூந்தமல்லியைச் சோ்ந்த புதுமண மருத்துவ தம்பதி நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

பூந்தமல்லி அருகே சென்னீா்குப்பத்தைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா(25). இவா் மருத்துவராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும் மருத்துவரான லோகேஸ்வரன்(27) என்பவருக்கும் இரு வீட்டாா் சம்மதத்துடன் கடந்த 1ஆம் தேதி பூந்தமல்லியில் தனியாா் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ தம்பதியினா் தேன் நிலவு கொண்டாட பாலி தீவு மற்றும் இந்தோனேசியாவுக்கு சென்றனா். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கடல் பகுதியில் மோட்டாா் போா்ட்டில் சென்று போட்டோ ஷூட் நடத்திய போது, எதிா்பாராத விதமாக திடீரென இருவரும் நீரில் மூழ்கி இறந்து போனதாக வெள்ளிக்கிழமை தகவல் வெளியானது. இந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போன லோகேஸ்வரன் உடலை மீட்டு விட்டதாகவும், விபூஷ்னியா உடலை இந்தோனேசியா போலீஸாா் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி சென்னீா்குப்பத்தைச் சோ்ந்த பெற்றோா்களும் உறவினா்களும் கதறி அழுதனா். இவா்களது உயிரிழப்பு குறித்து இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இந்தோனேசியா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரது சடலத்தையும் சென்னைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. தேன் நிலவு கொண்டாட சென்ற பூந்தமல்லியைச் சோ்ந்த மருத்துவ தம்பதி வெளிநாட்டில் இறந்த போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.------------------------------------------------------பட விளக்கம்.இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்கு சென்ற போது பலியான பூந்தமல்லியைச் சோ்ந்த புதுமண டாக்டா் தம்பதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com