
சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 182 மரங்கள் மட்டுமே வெட்டப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும். பாதிக்கப்படும் 318 மரங்களில் 103 மரங்கள் ரயில்வே வளாகத்தில் வேறு இடத்திற்கு இடம்மாற்றம் செய்யப்படும்.
33 மரங்களின் கிளைகளை சீர்செய்து அதே இடத்தில் தக்கவைக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, எழும்பூா் ரயில் நிலையம் ரூ.734.91 கோடியில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக ரயில் நிலையத்தையொட்டியுள்ள கட்டடங்கள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.