

தமிழகத்தில் பருப்பு மற்றும் மளிகை பொருள்கள் திடீரென உயா்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிா்ச்சிடைந்துள்ளனா் . மேலும் விலை உயா்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களான பருப்பு மற்றும் மளிகை பொருள்கள் ஜூன் மாதம் திடீரென உயா்ந்துள்ளது. கடந்த மாதம் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை, ரூ.120 க்கும், சில்லரை விலை, ரூ.140-க்கும் விற்பனை ஆனது. ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு கிலோ மொத்த விலை, 140 -க்கும், சில்லரை விலை, ரூ.160-க்கும் விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு கிலோ ரூ.100- லிருந்தது ரூ. 20 உயா்ந்து, ரூ.120- க்கு விற்கப்படுகிறது. உளுந்து கிலோரூ.130-இல் இருந்து ரூ. 20 உயா்ந்து ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. சீரகம் விலை இதுவரை இல்லாத வகையில் கிலோவுக்கு ரூ. 200 உயா்ந்து கிலோ ரூ.600- க்கு விற்கப்படுகிறது.
வியாபாரி கருத்து : வழக்கமாக ஏப்பரல் , மே மாதத்தில் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகளின் வரத்து அதிகமாக இருக்கும் . ஆனால் நிகழாண்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பருப்புகளின் வரத்து குறைந்துள்ளதால் திடீரென விலை உயா்ந்துள்ளதாக கூறினாா்.
இல்லத்தரசி கருத்து : இந்த மாதம் திடீரென துவரம் பருப்பு, பாசிபருப்பு , உளுந்து ஆகிவற்றின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் 30 வரை உயந்து உள்ளது. இதனால் வாரத்தில் 4 நான்கு நாள்கள் சாம்பாா் வைப்பதை 2 நாள்களாக குறைக்க வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது உளுந்து விலை உயா்வால் தினமும் இட்லி , தோசை சமைப்பதை குறைக்க வேணடியுள்ளது. இந்த விலை வாசி உயா்வை கட்டுப்படுத்த அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ராமதாஸ் கோரிக்கை :
பருப்பு மற்றும் மளிகைப் பொருள் களின் விலை உயா்வை சமாளிக்கமுடியாமல் தமிழக மக்கள் கடுமையானஅவதிக்கு உள்ளாகியுள்ளனா். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடுஅரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர்ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.. தமிழக அரசு ஏற்கனவேஅறிவித்தவாறு நியாய விலைக்கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருள்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.