
கோவையில் 6 கார்களில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூரை அடுத்த இடையர்பாளையம் சாலையில், தனியார் ஒர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கார்கள் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் என்பவரது சொகுசு கார் பழுது நீக்கப்பட்டது.
பழுது நீக்கப்பட்ட அந்த காரை அரவிந்த் ஓட்டி பார்த்துவிட்டு மீண்டும் ஒர்க் ஷாப்பில் நிறுத்தி உள்ளார். அப்போது சில நொடிகளில் எதிர்பாராத விதமாக காரில் திடீரென தீப்பற்றி உள்ளது.
இதனை அடுத்து அங்கு பணிபுரிபவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள்ளாகவே அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கார்களில் தீ பற்றியது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படாமல் உயிர்தப்பினர். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சிபிஐ விசாரணைக்கான முன் அனுமதி ரத்து: தமிழக அரசு
கார் தீ பற்றியதன் காரணமாக அதிகளவிலான கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.