சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய விளையாட்டுப் போட்டி: 7 தங்கங்களை வென்ற ராணிப்பேட்டை வீரர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

News image
Updated On :14 ஜூன் 2023, 8:58 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற ராணிப்பேட்டை விளையாட்டு வீரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து மாநிலங்களிடையேயான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம், மத்திய பிரதேசம், கர்நாடகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 616 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்று 7 தங்கப்பதக்கம், 4 வெள்ளி பதக்கங்களைப் பெற்றனர். அதேபோல் தடகளப் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 3 சில்வர் பதக்கம், 1 வெண்கல பதக்கம் பெற்றனர்.

இந்நிலையில் விளையாட்டு போட்டியை முடித்துக் கொண்டு ராணிப்பேட்டை திரும்பிய விளையாட்டு வீரர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அப்பொழுது விளையாட்டு வீரர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி மேலும் பல வெற்றிகளை பெற்று பல விருதுகளை பெற வேண்டும் என வாழ்த்தினார். அப்போது பயிற்சியாளர்கள் சிவகுமார், தர்ஷன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.