நீட் விலக்கு தான் சமூகநீதிக்கு நிலையான வெற்றி: ராமதாஸ் ட்வீட்

நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்துள்ளார் என்பதாலேயே இந்த தேர்வை நியாயப்படுத்த முடியாது என்றும் நீட் விலக்கு தான் சமூகநீதிக்கு நிலையான வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ்  கருத்து தெரிவித்துள்ளார
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் பிடித்துள்ளார் என்பதாலேயே இந்த தேர்வை நியாயப்படுத்த முடியாது என்றும் நீட் விலக்கு தான் சமூகநீதிக்கு நிலையான வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ்  கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண் பெற்று  தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்பதாலேயே அத்தேர்வை  நியாயப்படுத்த முடியாது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் அளவுக்கு வாய்ப்பும், வசதிகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம். 

கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு நீட் வெற்றி இப்போதும் எட்டாக்கனி தான். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு எப்போது விலக்கு கிடைக்கிறதோ, அப்போது தான் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சாத்தியமாகும்.  அது தான் சமூக நீதிக்கு நிலையான வெற்றியாக அமையும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com