டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு!

திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை (கோப்புப் படம்)
அண்ணாமலை (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read


சென்னை: திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி, அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிா் ஆனந்த், முதல்வரின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்துப் பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஏப்ரலில் வெளியிட்டாா்.

அண்ணாமலை வெளியிட்ட சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக சாா்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, தவறான தகவல் வெளியிட்டதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.

இதனை தொடர்ந்து, எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி அண்ணாமலை அவதூறு தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாகவும், நோட்டீஸ் அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17 ஆவது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் டி.ஆர். பாலு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜூலை 14-ஆம் தேதி அண்ணாமலையை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com