ஆள்கொணர்வு மனு மீதான உத்தரவுக்குப் பிறகு ஜாமீன் வழக்கு விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆள்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஜாமீன் மனு மீதான விசாரனை தொடங்கப்படும் என்று சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆள்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஜாமீன் மனு மீதான விசாரனை தொடங்கப்படும் என்று சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திமுக சாா்பில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரியும், ஓமந்தூராா் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்கக் கோரியும், செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல், செந்தில்பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை  மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அமைச்சா் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பு சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது. ஆள்கொணர்வு மனு மீதான தீர்ப்பை பொருத்தே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும். 

ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே செந்தில் பாலாஜி இடைக்கால ஜாமீன் கோரிய மனு மற்றும் அமலாக்கத்துறை நீதிமன்றக் காவல் கோரிய மனு மீது பின்னர் விசாரணை நடத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com