கிண்டி பல்நோக்கு மருத்துவமனையின் சிறப்புகள்

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஜூன் 15-ல் தமிழக முதல்வர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது. 
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையின் சிறப்புகள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் மிக முக்கியமானதாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஜூன் 15-ல் தமிழக முதல்வர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது. 

சென்னை கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஜூன் 15ஆம் தேதி மாலை 6 மணியளவில்  தமிழக முதல்வர் ஸ்டாலினால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 

பன்னோக்கு மருத்துவமனையின் பல்வேறு சிறப்பம்சங்கள் 

230 கோடி மதிப்பீட்டில் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 மேல்தளங்கள் கொண்ட மூன்று கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது
மார்ச் 21,2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பதினைந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. 
பத்து அதிநவீன சிகிச்சை மையங்கள் 
     இதயவியல் 
     நரம்பியல் 
     மூளையியல்  
     சிறுநீரகவியல் 
     நுரையீரகவியல்  
     மயக்கவியல் 
குடலியல் 
     ரத்த நாளவியல்
இரைப்பையியல்  
     புற்றுநோயியல் ஆகியவை இதில் அடங்கும்.

இதனுடன் 10 பெரிய அறுவை சிகிச்சை அறைகளும், 5 சிறிய அறுவை சிகிச்சை அறைகளும் மற்றும் 2 அவசர அறுவை சிகிச்சை அறைகளும் அமைந்துள்ளன.

ஒவ்வொரு தளங்களின் தனிச்சிறப்புகள் 
அடித்தளமானது மருந்துகள் சேமிக்கும் பகுதியாகவும் முதலாவது தளம் புற்றுநோய், இதயம் மற்றும் 10 அதிநவீன சிகிச்சை பிரிவுகளுக்கான தளமாகவும், இரண்டாவது தளம் பொது நோயாளிகளுக்கானதாகவும் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கங்கள் இருக்கும் பகுதியாகவும், மூன்றாவது தளம் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவ பகுதியாகவும், நான்காவது தளம் நோயாளிகளுக்கான தனி அறைகள் மற்றும் ரத்த வங்கிகள் உள்ள பகுதியாகவும், ஐந்தாவது தளம்  மயக்க மருந்துகளுக்கான பகுதியாகவும், ஆறாவது தளம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகளுக்கான மருத்துவத்திற்கான பகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கென ஒரு இயக்குனர் மற்றும் 2 உதவி நிலைய மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

30 இணை பேராசிரியர்களும், 100 உதவிப்பேராசிரியர்களும் மருந்தாளுனர்கள் மற்றும் செவிலியர்களை பணி நிரவல் அடிப்படையில் நிரப்பியபின் கூடுதலாக 60 செவிலியர்களும் இதுதவிர 757 பணியாளர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

6 தளங்களுக்கும் சென்று வர ஏதுவாக 10 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

36 தனி அறைகள் மற்றும் 33 பிரத்யேக சிகிச்சை அறைகள் ஆகியவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சை பிரிவில் 166 படுக்கைகளும், துறை ரீதியாக பொது சிகிச்சை பிரிவில் 837 மேலும் 3 படுக்கை வசதிகள் என உள் நோயாளிகளுக்காக 1000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தென் சென்னை மற்றும் புறநகர் பகுதியிலுள்ள மக்கள் பன்னோக்கு மருத்துவமனைகளுக்கு செல்ல கால தாமதம் ஆவதால் தென் சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையானது தென் சென்னையில் உள்ள சிறப்பான உயர்தர  பன்னோக்கும் மருத்துவமனை ஆகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்காக தனி சிறப்புடன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென பிரத்தியேக மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com