
234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் விழா, 12 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11.20 வரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுமார் 1600 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும், அனைவருடனும் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நடிகா் விஜயின் மக்கள் இயக்கம் சாா்பில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தன் பெற்றோா் முன்னிலையில் சுமாா் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.5,000 ஊக்கத் தொகை, சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் சுமார் 1,600 மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நடிகர் விஜய் மேடையில் நின்றவாறு பொன்னாடை போர்த்தி சான்றிதழ் - ஊக்கத்தொகை வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியில் பலர் கவிதை பாடியும் பாடல் பாடியும் விஜய்யை புகழ்ந்தனர். சில மாணவர்கள் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், தாங்கள் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டனர்.
காலை 11 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 11.20 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கியது முதலே மேடையில் நின்றவாறு அனைவருக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.