40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம்: சங்கர் ஜிவால்

சென்னையில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம் விரைவில் விதிக்கப்படும் என்று காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சங்கர் ஜிவால் (கோப்புப்படம்)
சங்கர் ஜிவால் (கோப்புப்படம்)

சென்னையில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டினால் அபராதம் விரைவில் விதிக்கப்படும் என்று காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக கூகுல் மேப்பில் டிராபிக் அலர்ட் வசதியை தொடக்கிவைத்தார். அப்போது பேசியதாவது: 

விபத்துக்களை தடுக்க மணிக்கு 40 கி.மீ. வேகம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  காலை 7 மணி முதல் இரவு 10 மணி அளவில் வரை 

1) ஆட்டோ 25 கி.மீ., வேகம்

2) கனரக வாகனங்கள் 35 கி.மீ., வேகம்

3) கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 40  கி.மீ., வேகம்

இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 7 மணி வரை 

1) ஆட்டோ 35  கி.மீ., வேகம்

2) கனரக வாகனங்கள் 40  கி.மீ., வேகம்

3) கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 50  கி.மீ., வேகம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12 விடியோக்களை உருவாக்கி உள்ளோம். போக்குவரத்து காவர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று  சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com